எத்தியோப்பிய விமான விபத்தில் 18 கனேடியர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்த நிலையிலேயே கனேடிய அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.
விமான விபத்து தொடர்பாக உடனடியாக எவ்வித முடிவுக்கும் வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, எத்தியோப்பிய விமான விபத்திற்கான காரணம் தொடர்பாக வெகுவிரைவில் கனேடிய பொதுமக்களுக்கு உறுதிபடுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கனேடிய பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு செயல்திறன்மிக்க நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எயர் கனடா விமானிகள் சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. அதற்கமையவே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.