நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து கொண்டுவரும் பிரேரணைக்கு மீண்டும் இணை அனுசரணை வழங்க இலங்கை எடுத்துள்ள தீர்மானம் இந்த நாட்டினை பாரிய அளவில் பாதிக்கும்.
இந்த பிரேரணையில் நாட்டின் பாதுகாப்பு குறித்தும், அரசியல் அமைப்பு குறித்தும், கலப்பு நீதிமன்றம் குறித்தும் பாரதூரமான நிபந்தனைகள் உள்வாங்கப்பட்டுள்ளன“ என குறிப்பிட்டுள்ளார்.