வடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே விரைவில் சந்திப்பொன்று இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேசிய சட்டமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, இரு கொரியாக்களையும் ஒரே நாடாக பிரகடனப்படுத்துவதற்கு வடகொரியாவுடன் பல்வேறு வழிகளில் ஒத்துழைத்து செயற்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும், இவ்விவகாரம் தொடர்பாக தனது ஆக்கபூர்வமான முடிவை அவர் வெளியிடவில்லை. வடகொரியாவுடனான உறவை ஒருங்கிணைப்பு அமைச்சு கையாண்டு வருகின்ற நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமெரிக்க – வடகொரிய இரண்டாவது உச்சிமாநாடு எவ்வித தீர்மானமுமின்றி நிறைவடைந்ததையடுத்து, வட – தென் கொரிய நாடுகளிடையிலான உறவில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.