இது தொடர்பாக டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொள்ளாச்சியில் இளம்பெண்களை கொடூரமான முறையில் நடத்தி, பாலியல் துஸ்பிரயோகம் புரிந்த கும்பலைச் சேர்ந்தவர்களுக்கு மிகக்கடுமையான தண்டனைகள் வழங்கப்படவேண்டும்.
இச்சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை நடத்தப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைதுசெய்யப்பட வேண்டும். இதற்கெனத் தனியான சிறப்புப் புலனாய்வு விசாரணைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாமல் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை விரைவாகத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என தமிழிசை சௌந்தர்ராஜன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.