இதையடுத்து பாண்டிராஜ் – சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கவுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பான ‘கனா’ படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.
இதேவேளை, சிவகார்த்திகேயன், ரவிக்குமாரின் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த படத்தில் நடித்துவருவதோடு பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.