மராட்டிய மாநிலம் மும்பையில், நடைபெற்ற மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா அமைப்பின் 13 – வது ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அடுத்த 2 மாதங்களில் புல்வாமா தாக்குதலை போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
இதன்மூலம், மக்களவைத் தேர்தலில் மக்களின் கவனத்தை அவர்களின் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் திசை திருப்பி, தேசபக்தியின் பக்கம் திருப்பி விடப்படும்.
இது மத்திய அரசின் திட்டமிடலாக இருக்கலாம். ராமர் கோவில் கட்டுதல் உள்ளிட்ட அனைத்துக் கொள்கைகளிலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தோல்வியை சந்தித்து உள்ளது.
இதனால் மக்களைத் திசை திருப்பும் முயற்சிகளில் ஆளும் பா.ஜ.க.
முன்னெடுக்கக்கூடும்” என ராஜ் தாக்ரே மேலும் குறிப்பிட்டுள்ளார்.