ஐ.எஸ். அமைப்பு நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
வுட்மன் என்ற குறித்த கனேடியர் கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி கடத்தப்பட்டார். அதனை தொடர்ந்து அவர் கடத்தப்பட்ட பகுதியிலிருந்து 100 கிலோமீற்றர் தொலைவிலிருந்து அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.
2016ஆம் ஆண்டு முதல் மேற்கு ஆபிரிக்க நாட்டில் தாக்குதலில் கொல்லப்பட்ட ஒன்பதாவது கனேடியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.