இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, ஆளுநர் மிருதுளா சின்காவை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரி மனுவொன்றை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சந்திரகாந்த் கவேல்கர் கூறுகையில், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளோம்.
நாங்கள்தான் தனிப்பெரும் கட்சியாக உள்ளோம். எங்களிடம் 14 அமைச்சர்கள் உள்ளனர். எனவே, எங்களைத் தான் முதலில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும். நாங்கள் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராகவுள்ளோம் என அவரிடம் கூறியுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.
40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப் பேரவையில் தற்பொழுது நான்கு தொகுதிகள் வெற்றிடமாக காணப்படுகிறன. இந்நிலையில் குறித்தப் பகுதியில் போட்டியிடுவதற்கு பா.ஜ.க.விற்கு போதியளவு பெருபான்மையில்லை என தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.