புளோரிடாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குடியேற்றவாசிகள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுப்பதற்கு மெக்ஸிகோ நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றேல், மில்லியன் கணக்கான சட்டரீதியான எல்லை பயணங்கள் மற்றும் பல பில்லியன் மதிப்பிலான வர்த்தக நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் இச்செயற்பாடு மேற்கொள்ளப்படும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க – மெக்சிகோ எல்லையை அடுத்த வாரம் மூடுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது. அதுவே சரியானது என கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் கடந்த இரண்டு வருடங்களாக அமெரிக்க – மெக்சிகோ எல்லையை மூடுவது தொடர்பாக பலமுறை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.