மத்திய அமெரிக்க நாடான கொஸ்டொரிக்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெங்கைய்ய நாயுடு, அங்கு இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“எமது நாடு அமைதியை விரும்பும் தேசம். நாம் வளர்ச்சிக்கான அனைத்துத் திட்டங்களையும் வகுத்து வருகின்றோம். ஆனால் மிகப் பெரிய சவால் ஒன்று எமது நாட்டின் வளர்ச்சியைச் சிதறடித்து வருகிறது.
உலகம் ஒரு குடும்பம் என்ற தத்துவத்தின் மீது நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆனால் எமது அயல்நாடு பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்து, பயிற்சி கொடுத்து, உதவி செய்து வருகின்றது.
பயங்கரவாதம் என்பது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல. அது சர்வதேச பிரச்சினை. இதுவரை நமது வலியைப் புரிந்து கொள்ளாமல் இருந்த அமெரிக்கா கூடத் தற்போது புரிந்து கொண்டுள்ளது.
பயங்கரவாதம் மனிதகுலத்தின் எதிரி. பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை. இந்து, இஸ்லாம், கிறிஸ்துவம் என எந்த மதமும் பயங்கரவாதத்தை போதிக்கவில்லை. எமது அயல்நாடு பயங்கரவாதிகளுக்கு உதவுகிறது என்பது ஊரறிந்த இரகசியம்” என துணை ஜனாதிபதி வெங்கைய்ய நாயுடு மேலும் குறிப்பிட்டுள்ளார்.