நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி, உ.பி.மாநிலம் அமேதி தொகுதியிலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி, ரேபரேலி தொகுதியிலும் மீண்டும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் காங்கிரஸுடன் இணைந்த கட்சிகள், ராகுல் போட்டியிடவுள்ள தொகுதி குறித்து வெவ்வேறுபட்ட கருத்துக்கைளை வெளியிட்டு வருகின்ற நிலையில் கன்னியாகுமாரி தொகுதியில் அவர் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க தமிழகத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் ராகுல் போட்டியிடடுவாரென அம்மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.