நியூஸிலாந்து துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதல் காணொளி சமூக ஊடகங்களில் நீண்டநேரம் ஒளிபரப்பப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவமானது, சமூக ஊடகங்களின் ஒழுங்குமுறையை கேள்விக்குட்படுத்துவதாக அமைந்துள்ளதெனவும் சமூக ஊடகங்களில் இருண்ட பக்கங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
50 பேரைக் காவுகொண்ட நியூஸிலாந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் சமூக ஊடகங்களில் நீண்ட நேரம் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. இது பாரிய விமர்சனங்களையும் கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை சமூக ஊடகங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுபவரப்படவேண்டுமென சாஜித் ஜாவிட் நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.