மரணமடைந்த
மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ விளையாட்டு கழக உதைப்பந்தாட்ட அணி வீரருக்கு அஞ்சலி செலுத்தும் இறுதி நிகழ்வு
இன்று பிற்பகல் கூழாவடி டிஸ்கோ விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது
மட்டக்களப்பு கூழாவடி
டிஸ்கோ விளையாட்டு கழக உதைப்பந்தாட்ட அணி
வீரரின் இறுதி அஞ்சலி நிகழ்வுக்காக கூழாவடியில் உள்ள அவரது இல்லத்தில்
இருந்து கழக வீரர்களினால் உடல் ஊர்வலமாக
எடுத்துவரப்பட்டு இறுதி அஞ்சலி நிகழ்வுக்காக
கூழாவடி புனித அந்தோனியார் ஆலயத்தில் விசேட திருப்பலி
ஒப்புகொடுக்கப்பட்டு தொடர்ந்து மட்டக்களப்பு கூழாவடி டிஸ்கோ விளையாட்டு கழக
மைதானத்தில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது
நடைபெற்ற இறுதி அஞ்சலி நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட உதைப்பந்தாட்ட சம்மேளன தலைவரும் ,மாவட்ட அரசாங்க அதிபருமான
எம் .உதயகுமார் , மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசெப் பொன்னையா ஆண்டகை ,
அருட் தந்தையர்கள் , அருட் சகோதரிகள் விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள் , குடும்ப உறவுகள் , பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டதுடன் இறுதி
நல்லடக்கம் நிகழ்வுகள் மட்டக்களப்பு கள்ளியங்காடு கத்தோலிக்க மயானத்தில்
நடைபெற்றது