அத்துடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளுக்கு பா.ஜ.க. பதில் சொல்லியே ஆகவேண்டும் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘சாமனா’வில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகிய தலைப்பு செய்திப் பக்கத்திலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள சிவசேனா, அவ்வப்போது பா.ஜ.க. மற்றும் பிரதமர் மோடிக்கு எதிரான சில கருத்துகளையும் வெளியிட்டு வருகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயற்பாடு தொடர்பாக நாட்டு மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தற்போது பல நாடுகளின் தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பயன்பாடு முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட நிலையில் நாம் ஏன் இவற்றை இன்னும் நம்பிக் கொண்டிருக்க வேண்டும்? என அந்த கட்டுரையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவோம். அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டுவோம் என்றெல்லாம் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க. வாக்குறுதி அளித்திருந்தது.
இதில் எதுவும் நிறைவேற்றப்படாததால் இந்த தேர்தலில் மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். மக்களை நீண்டகாலத்துக்கு முட்டாள்களாக்க முடியாது என்பதை வரலாறு நமக்கு தெளிவுப்படுத்தி உள்ளது என்று சிவசேனா குறிப்பிட்டுள்ளது.