சேலம், கிழக்கு மாவட்டத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சரத்குமார் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தற்போதுள்ள கட்சிகள் தங்களின் நலன்களை கருத்திற்கொண்டு செயற்படுகின்றதே ஒழிய மக்களை பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை.
மேலும் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி தமிழகத்தில் கூட்டணி சேர்ந்துள்ள கட்சிகள் அனைத்தும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தவில்லை.
இவைகள் பிற கட்சிகளை குறை கூறி தங்களின் கட்சியில் செல்வாக்கை ஏற்படுத்த முனைகின்றது. மாறாக மக்களின் வாழ்க்கையை சிறப்படைய செய்வதற்கு மேற்கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்து ஆராயவில்லை. இதனாலேயே மக்களும் அத்தகைய கட்சிகளை வெறுக்கின்றனர்.
ஆகையால் தமிழகத்தில் புதியதொரு மாற்றத்தை ஒத்த கருத்துடைய கட்சிகளாலேயே கொண்டுவர முடியும்.
அந்தவகையில் நாங்கள் ஊழல் இல்லாத ஆட்சியை நோக்கி பயணிக்கின்றோம். இதனால் மக்கள், தங்களை வழிநடத்தக்கூடிய சரியான தலைவர்களை தெரிவு செய்ய வேண்டியது அவசியம்” என சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.