வெளியுறவுத்துறை அமைச்சகத்தினை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஏனைய ஒன்பது நாடுகளுக்கான தூதுவர்களின் பெயர்களும் நாடாளுமன்ற உயர் பதவி குழுவிற்கு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதற்கமைய, நாகன்டல – நெதர்லாந்து, குணசேகர – இந்தோனேசியா, ஜெயசூரிய – தாய்லாந்து, சேரம் – பஹ்ரெய்ன், எஸ்.கே.குணசேகர – பிலிப்பைன்ஸ், அமீர்ராஜ்வாட் – ஓமான், ஜெயசிங்க – ஐக்கிய அரபு இராச்சியம், வில்பத்த – இஸ்ரேல் ஆகியோரின் பெயர் விபரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விரைவில் இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு அனுமதி கிடைத்தவுடன் அவர்கள் தங்களது கடமைகளை பொறுப்பேற்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.