எனினும் தமிழ் தலைவர் அவ்வாறு ஒற்றுமையாக செயற்படாமையினாலேயே தமிழர்களுக்கான தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஜெனீவாவில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருக்காது.
பாதிக்கப்பட்ட மக்கள் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பதற்கான காரணங்களை சர்வதேச நாடுகளுக்கு தமிழ் தலைவர்கள் வெளிப்படுத்தியிருந்தால் எமக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது. எமது விடயத்தில் இனியாவது தமிழ் தலைமைகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.