நியூசிலாந்து மசூதி தாக்குதலில் 50 பேரின் உயிர் காவுகொள்ளப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இச்சந்திப்பு நடத்தப்பட்டது.
கிறைஸ்ட்சேச்சில் இடம்பெற்ற அர்த்தமற்ற பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து, முஸ்லிம் சமூகத்தினருடனான தமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இச்சந்திப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வழிபாட்டாளர்கள் நிறைந்த நியூசிலாந்தின் இரு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 41 பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதல் இடம்பெற்ற தினம் நாட்டின் இருண்ட நாட்களில் ஒன்று என நியூசிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.