மூன்று ஆண்டுகளில் 200 மில்லியன் டொலர்கள் வரி வருவாயாக பெற்றுக்கொள்ளப்படும் என பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தினால் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் நேற்று (புதன்கிழமை) கருத்து தெரிவித்த மாகாண நிதிஅமைச்சர் கரோல் ஜேம்ஸ், மாகாணத்தில் இப்போது மூன்று ஆண்டுகளுக்கு 68 மில்லியன் டொலர் வருவாயே கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.
சட்டப்பூர்வமாக்குவதில் மத்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட தாமதங்களே இதற்கு காரணம் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.