பாப்பரசர் பிரான்சிஸினால் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வத்திகான் மற்றும் ரோம் நகரிலுள்ள வழிபாட்டு தலங்கள் மற்றும் வத்திக்கானின் தலைமையில் உலகளாவிய ரீதியில் இயங்கும் இராஜதந்திர சபைகள் ஆகியவற்றில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் வகையில் இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக முதல் முறையாக இந்த புதிய விதிகளை கொண்ட கடுமையான கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.