எதிர்வரும் 30ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
நச்சுத்தன்மையற்ற உணவுப்பொருள் உற்பத்தி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் சிறுநீரக நோயாளர்கள், நீரிழிவு நோயாளர்கள் மற்றும் புற்று நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதற்கு பாதுகாப்பற்ற, நச்சுத்தன்மை கொண்ட உணவுப் பொருட்களே காரணமாக அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.