குறித்த ரயில் சேவை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட நிலையில் ரயிலில் 12 பேர் மாத்திரமே பயணம் செய்துள்ளதோடு, அவர்கள் அனைவருமே பாகிஸ்தானியர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த ரயில் சேவை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நட்புறவை ஏற்படுத்தும் வகையில் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றது.
கடந்த சில நாட்களாக இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் நிலவிய போர் பதற்ற நிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் நடத்திய தாக்குதலையடுத்து குறித்த ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
