இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை – தமிழக மீனவர்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கும் நிகழ்வாக கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா அமைந்துள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த திருவிழாவில் இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து ஆறாயிரத்திற்கும் அதிகமான பக்த அடியார்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திருவிழாவிற்கான முன்னேற்பாடுகளை இலங்கை கடற்படை முன்னெடுத்து வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.