இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், “பொள்ளாச்சியில் நடந்துள்ள பாலியல் துஷ்பிரயோக சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆயிரமாயிரம் பெண் தெய்வங்களை வணங்கி வழிபடக்கூடிய கொங்கு மண்டலத்தில் இப்படிப்பட்ட ஒரு படுபாதக செயல் நடந்துள்ளது பதைக்க செய்துள்ளது.
குற்றங்களை பதிவு செய்து, வழக்கு தொடுத்து, நீதிமன்றங்களுக்கு கூட்டிச் சென்று, முறைப்படி விசாரித்து, சட்டப்படி தண்டனை கொடுக்காமல், அதே பொள்ளாச்சி மண்ணில் இழுத்துக்கொண்டு வந்து, அனைவரும் பார்க்கும் வகையில் கழுவில் ஏற்றியோ, தூக்கிலிட்டோ, அரபு நாடுகள் பாணியில் கொன்றால்தான், இதுபோன்ற பாதகச் செயல்கள் அடங்கும்.
அல்லது இதுபோன்ற ஆயிரக்கணக்கான பெண்களை அக்கிரமக்காரர்கள் அழித்துக் கொண்டேதான் இருப்பார்கள். முறையற்ற மனிதர்களை நாம் வேறறுக்க வேண்டும் என்பதை, எல்லாப் பொதுமக்கள் சார்பிலும், நீதியின் முன்னாலும், பொலிஸாரின் முன்னாலும், என்னுடைய கோரிக்கையாக நான் முன்வைக்கிறேன்“ என குறிப்பிட்டுள்ளார்.