நாடாளுமன்றில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”கடந்த காலத்தில் நாட்டில் யுத்தம் நிலவிய போது, ஆலய வழிபாட்டின் மூலமே பாதிக்கப்பட்ட மக்கள் தம்மை ஆறுதல்படுத்திக் கொண்டனர். அன்று தமக்கு ஆறுதல் தந்த ஆலயங்களை இன்று அம்மக்கள் பறிகொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
வடக்கு கிழக்கில் தொல்பொருள் திணைக்களங்களின் செயற்பாடு பாரிய பிரச்சினையாகக் காணப்பட்டு வருகிறது. முல்லைத்தீவிலேயே அதிகளவில் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மக்களின் இடங்களை அபகரிப்பது தொடர்பாக கலாசார அலுவல்கள் அமைச்சர் அவதானம் செலுத்தி மக்களின் நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டும்.
யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் மீள்குடியேறியுள்ள அதேவேளை, மேலும் பலர் மீள்குடியேற்றத்திற்காக போராடிக் கொண்டிருக்கின்னர்.
இவ்வாறான நிலையில் தொல்பொருள் திணைக்களங்கள் மக்களின் நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு மக்களது உணர்வுகளுடன் விளையாடிக் கொண்டிருந்தால் நாட்டில் தேசிய நல்லிணக்கம் ஏற்படுவது சந்தேகம்.
நாட்டில் அனைவரும் சம உரிமையுடன் வாழ்வதற்கு ஏனையோரை உணர்வு ரீதியாக புண்படுத்தாத வகையில் செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.