அல்பேர்டாவைச் சேர்ந்த 29 வயதான இளம் தாய் ஒருவருக்கே இவ்வாறு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குழந்தையால் நடக்கவோ நிற்கவோ முடியவில்லை என்பதைக் கண்டிருந்தும், குழந்தை வலியால் துடிப்பதை அறிந்திருந்தும் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தவறியதாக குறித்த இளம் தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அவருக்கு மூன்றாண்டுகள் சிறைதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன், குழந்தையின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு குழந்தையின் பாட்டியிடம் குழந்தையை ஒப்படைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ள இளம் தாயை மனநல பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
