2016 ஆம் ஆண்டு தெஹ்ரான் விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நஷானின் ஈரானின் மதகுருமார்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்டார். இக்குற்றச்சாட்டுக்கு நஷானின் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நஷானினை விடுவிக்குமாறு பிரித்தானிய அரசாங்கமும் ஈரானை வலியுறுத்தி வருகின்ற போதிலும் அவரை விடுவிப்பதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் நஷானினை விடுதலை செய்வதற்கு ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அவருக்கு ராஜதந்த்திர பாதுகாப்பு வழங்கப்படுமென பிரித்தானியா அறிவித்துள்ளது.