குறித்த உயர்மட்ட கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதன்போது, ஒலுவில் துறைமுக நிர்மாணிப்பில் காணிகளை இழந்த மக்களுக்கு நஷ்டஈடுகளை வழங்குதல், மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு பொது வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், கடலரிப்பினால் அழிந்துவரும் ஒலுவில் கிராமத்தை பாதுகாத்தல், போன்ற பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் நபீல் அமானுல்லாஹ், பிரதேச சபை உறுப்பினர் அமீன், துறைமுக அதிகார சபையின் உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.