இவ்விடயம் தொடர்பாக காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எச்சங்களை புளோரிடாவிற்கு கொண்டு சென்று காபன் பரிசோதனைகளை நடத்த 1 தசம் 3 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், காபன் பரிசோதனை அறிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு கண்டெடுக்கப்பட்டுள்ள எச்சங்கள் குறித்த இறுதி முடிவை எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புளோரிடாவில் மேற்கொள்ளப்பட்ட காபன் பரிசோதனை அறிக்கைக்கு அமைய கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள், 1400 முதல் 1650 ஆண்டு வரை பழமையானவை என தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
ஆனால் இந்த ஆய்வு அறிக்கைக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் உள்ளிட்டவர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த மனிதப் புதைகுழி தொடர்பான இறுதிமுடிவு எதிர்வரும் 22 ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ளதாக, அகழ்வு பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்.
இதற்கமைய அன்றைய தினம், மன்னார் நீதவானை தடையவியல் பரிசோதனை குழுவும், காணாமல் போனோர் அலுவலகத்தின் பிரதிநிதிகளும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடதக்கது.