இது தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கைத் துறைமுக அதிகார சபைக்கு இதில் 15 ஏக்கர் காணியை கைமாற்றிக் கொடுப்பதற்காக வடக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமரப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைவாக இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனத்திற்கு உட்பட்ட சுமார் 15 ஏக்கர் கொண்ட காணியை கைமாற்றிக் கொடுப்பது சிறந்தது என அடையாளங்காணப்பட்டுள்ளது.
காங்கேசன்துறைத் துறைமுக அபிவிருத்திக்குத் தேவையான நிதியை இந்திய அரசாங்கத்தின் நிவாரணத்துடன் பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.