பிரபல குணச்சித்திர நடிகர் போஸ் வெங்கட் முற்றிலும் புதுமுகங்கள் நடித்து வரும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ரோபோ சங்கர் பாடிய இப்பாடல் அண்மையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இப்பாடலை இசையமைப்பாளர் ஹரிசாய் இசையமைத்துள்ளார்.
ஒரு நிஜ ஆட்டோக்காரர் ஒரு பாட்டு பாடினால், அப்பாடலில் ஸ்ருதி, தாளம் சரியாக இருக்காது. அதேபோல் இந்த பாடல் மிக இயல்பாக இருக்கும் என்றும் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்.
இந்த பாடலின் காட்சியமைப்பில் ஆட்டோக்காரர்கள் தினமும் சந்திக்கும் அனுபவங்கள், சிக்கல்கள் குறித்து தெரிவிக்கப்படவுள்ளதாகவும், ரோபோ சங்கரின் குரல் அனைவருக்கும் பரீட்சயமானது என்பதால் அவரை பாட வைத்ததாகவும் போஸ் வெங்கட் குறிப்பிட்டுள்ளார்.