சோபியான் மாவட்டத்தில் குங்னு கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக மாநில பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாநில பொலிஸார் அங்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன்போது குங்னு கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த பதுங்கு குழியை இன்று (புதன்கிழமை) கண்டுபிடித்தனர்.
மேலும், அங்கிருந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவான துண்டுப் பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு தீவிர தேடுதல் வேட்டையிலும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் காஷ்மீர் பகுதியில் தொடர்ச்சியாக தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் குறித்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகின்றது.