குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்த நிலையில், பொது சின்னத்தை ஒதுக்க பரிசீலனை செய்யுங்கள் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரையும் செய்திருந்தது.
அதுவரை சுயேட்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவுறுத்தியுள்ளது.
சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்குவது போன்று தனித்தனி சின்னம்தான் ஒதுக்க முடியும் என்று தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
ஆனால் பொதுச்சின்னத்தை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை, அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.