கடந்த 20 வருடங்களில் யெமனுக்கு விஜயம் செய்துள்ள முதல் பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சரும் யெமனில் போர் ஆரம்பித்ததன் பின்னர் அங்கு பயணிக்கும் முதல் மேற்குலக சிரேஷ்ட அரசியல் பிரமுகரும் என்பது குறிப்பிடத்தக்கது.
யெமன் அரசுக்கும் ஹூதி கிளர்ச்சியாளர்களுக்குமிடையிலான போரை முடிவுக்கு கொண்டுவரும் பொருட்டு இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையினால் சமாதான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த சமாதான பேச்சுவார்த்தைகளின்போது ஏற்றுக்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை இருதரப்பினரும் பின்பற்ற தவறினால் போர்நிறுத்தம் தோல்வியடைவதற்கான சாத்தியமுள்ளதாக ஜெரெமி ஹண்ட் எச்சரித்துள்ளார்.
நான்கு வருடங்களாக இடம்பெற்றுவரும் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யெமன் நாட்டுக்கும் பட்டினியின் விளிம்பிலிருக்கும் 20 மில்லியன் யெமன் மக்களுக்கும் இது முக்கியமான ஒரு தருணமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
போர்நிறுத்தம் தோல்வியடைந்து மறுபடியும் யுத்தம் ஆரம்பிக்கும் நிலை ஏற்பட்டால் அது மிகக் கொடூரமான மனிதாபிமான நெருக்கடியாக அமையுமெனவும் ஹண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
