மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இலங்கை மீது தொடர்ச்சியான கவனத்தினை செலுத்தவேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கின்றோம்.
ஐ.நா. மனித உரிமைப் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட சிலவற்றை தற்போதைய அரசாங்கம் செய்திருந்தாலும் பல விடயங்கள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.
இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் மேற்பார்வை அதிகமாக இருக்கவேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருக்கின்றோம்.
ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு கொண்டுசெல்வதில் சீனாவின் செயற்பாடு பல தடைகளை ஏற்படுத்துகின்றது. மகிந்தவின் ஆதரவு நிலைப்பாட்டினை சீனா கொண்டிருப்பதன் காரணமாக ஐ.நா.வின் பல தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்கவில்லை.
சீனா போன்ற நாடுகள் பாதுகாப்புச் சபையில் இருக்கும்போது இலங்கை தொடர்பில் தீர்மானங்களை கொண்டு வருவது எந்தளவு சாதக நிலையிருக்கின்றது என்பதைப் பார்க்க வேண்டும்” என நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.