பஞ்சாப் மாநில முதல்வரின் செய்தித் தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள செய்தி தொடர்பாளர் ஷபாஸ் கில், ”இந்நிகழ்வு துரதிருஷ்டவசமானது. சோஹன் சொன்ன கருத்தில் இருந்து பஞ்சாப் அரசு விலகி நிற்கிறது. அது பஞ்சாப் அரசின் கருத்தல்ல.
இந்துக்கள் உட்பட எந்த சிறுபான்மையினரையும் அவமதிக்கும், புண்படுத்தும் கருத்துக்களையோ செயல்களையோ, பஞ்சாப் அரசு அனுமதிக்காது என முதலமைச்சர் கூறியதாகவும்“ அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்துக்களை புண்படுத்தும் விதமாக நடந்துகொண்டதற்காக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஆளும் கட்சியான தெஹ்ரீக் – இ – இன்சாஃப்பின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெஹ்ரீக் – இ – இன்சாஃப்பின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”பாகிஸ்தான் கட்டமைக்கப்பட்டது சகிப்புத்தன்மை எனும் முதல் தூணால்தான்” என அந்த டுவிட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.