ரக்ஸி சாரதிகளுக்கான தேவைகளை நிர்வகிக்கும் முகமாக சமூக மற்றும் பொதுச்சேவைகள் ஆணைக்குழு நேற்று (புதன்கிழமை) திருத்த உடன்படிக்கையை அறிவித்தது.
இந்த விடயத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான பத்திரத்துக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அங்கீகாரம் வழங்கியுள்ளனர்.
தாக்குதல், பாலியல் தாக்குதல், மோசடி, கடத்தல் மற்றும் போதைப்பொருள் என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அவர் வாகனத்தைச் செலுத்த தகுதியற்றவராக கொள்ளப்படுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு பாதுகாப்பான விடயமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.