எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில், இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக ஆசிரியர்களைச் சந்தித்து மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, டழஸ் அழகப்பெரும, சி.பி.ரத்நாயக்க, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, மஹிந்தயாபா அபேவர்தன மற்றும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தக் கலந்துரையாடலின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முன்னெடுப்புக்களைச் செய்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், புதிய சட்டமூலத்தில் இருக்கக் கூடிய பாதகமான தன்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஊடக ஆசிரியர்களிடம் வலியுறுத்தினார்.