நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சரத்குமார் இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்துப் பேசினார். அப்போது, நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘‘முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கு சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது. அத்துடன் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவும் உள்ளோம்.
முதல்வரை சந்தித்தபோது, சிறுபான்மையினருக்கு பாதுகாவலாக மத்திய அரசு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். மத்தியில் வலிமையான ஒரு அரசு வரவேண்டும், தொங்கு நாடாளுமன்றம் அமைந்துவிடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கிறேன்” என்று தெரிவித்தார்.