அவ்வகையில், குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள், பாலியல் வன்கொடுமைகளை இந்த விசாரணை அமைப்பு கண்காணிக்கவுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட இப்பிரிவில் ஏ.டி.ஜி.பி. தலைமையில் 3 எஸ்.பி.க்கள் நியமிக்கப்படவுள்ளனர். இந்த பிரிவு சி.பி.ஐ. மற்றும் இன்டர்போலுடன் கலந்துரையாடி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் குற்றவாளிகள் குறித்த தொகுப்பை இந்த அமைப்பு உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், சமூக வலைத்தளப் பயன்பாடு குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இதனையடுத்தே தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த சிறப்பு பொலிஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.