இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி ரெப்லிட்ஸ் (Alaina B. Teplitz) மற்றும் நெதர்லாந்து தூதுவரான ஜோன்னே டோர்னிவேர்ட் (Joanne Doornewaard) ஆகியோரே ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதுடன் யாழ்.மாவட்டத்தில் உள்ள மக்களின் பொருளாதார நிலைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட. பகுதி மக்கள் எதிர்நோக்கியுள்ள பொருளாதார ரீதியிலான பிரச்சினைகள் குறித்து ஆளுநர், தூதுவர்களுக்கு விளக்கமளித்தார்.
அத்துடன், மக்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்குச் சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்துமாறும் இரு நாட்டு தூதுவர்களிடமும் அவர் கோரிக்கை விடுத்தார்.
மேலும், வடக்கு மாகாணத்தை கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் மற்றும் நிபுணர்களின் தேவைகள் குறித்தும் ஆளுநர் இதன்போது சுட்டிக்காட்டினார்.