அதன் அடிப்படையில், 2 இலக்கியவாதிகளின் பெயர்களை எதிர்வருகின்ற ஒக்டோபர் மாதம் ஸ்வீடிஷ் இலக்கிய குழு அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் இயற்பியல், வேதியியல், மருத்துவம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகின்றது. அந்தவகையில், ஒவ்வொரு துறையிலும் விருது பெறும் நபரை அதற்கான குழு தேர்வு செய்யும்.
ஸ்வீடிஷ் இலக்கிய குழுவில் பாலியல் முறைகேடுகள் தொடர்பான சர்ச்சை எழுந்ததை முன்னிட்டு, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒளிப்பட கலைஞரான ஜீன் கிளாட் அர்னால்ட்டுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதன்போது, அவரது மனைவியான கவிஞர் கத்தரினா குழுவை விட்டு விலகினார்.
மேலும், இக்குழுவின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் இராஜினாமா செய்தனர். இந்த பிரச்சினைகளால் கடந்த 2018ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபால் பரிசு வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது புதிய உறுப்பினர்களுடன் ஸ்வீடிஷ் இலக்கிய குழு சீரமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு என 2 பேருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படும் என நோபல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.