கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதா என்பது குறித்து ஜனாதிபதி உள்ளிட்ட பொதுஜன பெரமுனவுடனும் கலந்துரையாடி முடிவு எடுக்கப்படும். பெரும்பாலும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதே எமது முடிவு.
தற்போதை அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லை என்பதையும் கூறவேண்டும். பெரும்பான்மையை நிரூபிக்கவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது.
அதன் காரணமாகவே வரவு செலவு திட்டம் வரவேற்கதக்கது என சுமந்திரன் கூறியுள்ளார். குறிப்பாக கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தனிப்பட்ட ரீதியில் நன்மை அடையும் வகையில் வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
அதாவது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் பணத்தை பெறும் வகையில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இது சிறந்த வரவு செலவு திட்டம் என சுமந்திரன் கூறுகின்றார்.
அதற்கு வேறு காரணங்கள் இல்லை. கூட்டமைப்பின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்தால் அவர் அவ்வாறு கூறவில்லை மாறாக பணம் கிடைப்பதால் அவ்வாறு கூறுகின்றார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை” என தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.