மட்டக்களப்பு மாவட்ட சென்ட் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படை அணியினரினால் சிரமதான பணி இன்று முன்னெடுக்கப்பட்டது
சென்ட் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படை மட்டக்களப்பு மாவட்டத்தில்
ஆரம்பிக்கப்பட் இருபது வருட நிறைவினை முன்னிட்டு மாவட்ட சென்ட் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படை அணியினரினால் சிரமதான பணி இன்று
பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பகுதியில் முன்னெடுக்கப்பட்டது .
மட்டக்களப்பு மாவட்ட சென்ட் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையின் உதவி ஆணையாளர்
சுந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்
பொலித்தீன் அற்ற சூழலையும்
,சமூகத்தையும் உருவாக்க வேண்டும்
என்ற வகையில் சமூகத்துக்கு
விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் இந்த சிரமதான பணிகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளது
இந்த சிரமதான பணியில் மாவட்ட சென்ட் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையின்
ஆணையாளர்கள் , சென்ட் ஜோன்ஸ் அம்புலன்ஸ் படையினர் கலந்துகொண்டனர்