நோட்டா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. ஆனால் நோட்டா படம் இரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிப்பதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயன்தாரா தற்போது, தளபதி 63 படத்தில் நடித்து வருவதுடன், மேலும், முருகதாஸ் – ரஜினி கூட்டணியில் உருவாகும் புதிய படத்திலும் இவர்தான் கதாநாயகி எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.