அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லோட் நைசபி இலங்கை குறித்து பிரித்தானியா கொண்டு வந்த பிரேரணை தவறானது என பல முறை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதாவது அந்த பிரேரணையில் காணப்படும் சகல புள்ளிவிபரங்களும் பிழையானது என அவர் கூறியுள்ளார்.
பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் தரவுகளை பார்வையிட்ட பின்னரே இதனை உறுதிப்பட கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணை தவறானது என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இவற்றைப் புரிந்துக்கொண்டு இனியாவது இலங்கைக்கு சார்பான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் அவரின் கருத்தை இதுவரை இலங்கை பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதி, மூவரை ஜெனிவாவிற்கு அனுப்பத் தீர்மானித்துள்ளார்.
அவர்கள் இப்பிரேரணையை நீக்கிக்கொள்வது குறித்து ஆராய்வர். இலங்கைக்கு எதிராக இலங்கை கைச்சாத்திட்ட பிரேரணையை ஜனாதிபதியும் விரும்பவில்லை.
ஆகவேதான் சுயாதீன நாடு என்ற வகையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை வாபஸ் பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தினேஸ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.