‘“இந்திய அரசை நான் நம்பிவிட்டேன். உலகம் நம்பவேண்டுமே” என்று சிதம்பரம் கூறியிருந்தார். இந்நிலையில், மத்திய நிலக்கரி மற்றும் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (திங்கட்கிழமை) தூத்துக்குடி விமானநிலையத்தில் இவ்விடயம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
இதுகுறித்த தொடர்ந்தும் தெரிவித்த பியூஷ் கோயல், “இந்த நாட்டின் குடிமகனாக இருந்துகொண்டு இராணுவத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ப.சிதம்பரம் போன்றோர்கள் இப்படி பேசுவது கண்டனத்திற்குரியது.
குறைகூறுவதன் மூலம் பாகிஸ்தான் அரசிற்கும் ஆதரவாக பேசுகின்றார்கள். நாடு தீவிரவாதத்தால் பல சவால்களை சந்தித்து வருகின்றது. நல்ல முடிவெடுக்கும் நாட்டை பாதுகாக்கும் தலைவராக பிரதமர் மோடி செயற்படுகின்றார்” எனக் கூறினார்.
