கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் வேளையில், சேதங்களை ஏற்படுத்தக்கூடிய வேகமான காற்று ரொறன்ரோவை தாக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மணிக்கு 90 இலிருந்து 110 கிலோமீற்றர் வரையிலான வேகத்துடன் காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த காற்றின் வேகம், கட்டிடங்கள், குறிப்பாக கட்டிடங்களின் கூரைகள், ஜன்னல்கள் என்பற்றை சேதப்படுத்தக் கூடும் எனவும், மரங்கள் கம்பங்கள் முறிந்து வீழந்து மின் தடை ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 முதல் 10 சென்ரிமீற்றர் உயரத்திற்கு பனிபொழிவு ஏற்படக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக காலை வேளையில் வாகனப் போக்குவரத்தில் ஈடுபடும்போது மிகவும் அவதானமாகச் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
