இன்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட இத்தாக்குதலில் உயிர்ச்சேதம் ஏதும் இடம்பெறவில்லையென இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் மேலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த பெப்ரவரி 14 ஆம் திகதி ஜம்மு-காஷ்மீர், புல்வாமா பகுதியில் இராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டுத் தாக்குதலில் 40இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் உயிரிழந்திருந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் தமது கண்டனங்களை தெரிவித்திருந்தன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் இராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது கார்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.