இவ்விடயம் குறித்து ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, நிதி ஆயோக் அமைப்பு மக்களுக்கு வேண்டிய எதனையும் செய்யாமல் மோடி பற்றியே விளம்பரம் செய்து வருகின்றது.
ஆகையால் நாம் ஆட்சிபீடம் ஏறினால், நிதி ஆயோக்கை கலைத்து விட்டு அதற்கு பதிலாக மிகச்சிறந்த பொருளாதார வல்லுனர்கள், பல்துறை நிபுணர்கள் ஆகியோரை உள்ளடக்கி திட்டக் கமிஷனை உருவாக்குவோம்.
குறித்த திட்ட கமிஷன், நாட்டிலுள்ள வளங்களை பயன்படுத்தி சிறந்த பொருளாதார கொள்கைகளை வகுப்பதுடன் வறுமையை ஒழிப்பதற்கான புதிய திட்டங்களை உருவாக்கும் பணிகளையும் மேற்கொள்ளும்” என ராகுல், தனது டுவிட்டரில் பதிவேற்றியுள்ளார்.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், செயற்பாட்டிலிருந்த திட்டக் கமிஷனையே கலைத்துவிட்டு நிதி ஆயோக் அமைப்பை உருவாக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.